'நான் ஏன் போட்டியிடவில்லை': இது தான் ஜி.கே.வாசன் சொன்ன விளக்கம்
சென்னை: மக்களவை தேர்தலில் தான் ஏன் போட்டியிடவில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக கரை சேர முடியாது என நினைத்த அக்கட்சியின் மத்திய அமைச்சர்களும், மாநில தலைவர்களும் திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலர வேண்டும் என ரகசிய முயற்சி எடுத்தனர். மேலும், டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தமிழகம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினர். ஆனால் அது தேல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மற்றும் முன்னாள் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்தனர். இது கட்சியில் ஒரு புறம் வரவேற்பையும் மறுபுறம் கடும் விமர்சனங்களையும் கிளப்பியது. இந்த நிலையில் தான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தை அவரது ஆதரவாளர்களிடம் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நல்ல கூட்டணி அமைக்க வேண்டும். அது வெற்றிக் கூட்டணியாக இருக்க வேண்டும் என விரும்பினோம். மூத்த தலைவர்களும், அதிக அளவில் இளைஞர்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் நினைத்து அதற்கான பணிகளில் இறங்கி செய்து வந்தோம்.
ஆனால் அகில இந்திய தலைமை தமிழக தலைவர்களின் கருத்துக்களை கேட்பதும் இல்லை. அதை தாங்களாவே முன்வது சொன்னாலும் எடுத்துக் கொள்வதில்லை. இப்படி இருந்தால் என்ன செய்வது. அது சரி போனால் போகட்டும். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பது உறுதி. அது போல நானும் சென்னை அல்லது மற்ற தொகுதி ஏதாவது ஒன்றில் நிற்க உறுதி பூண்டு இருந்தேன்.
ஆனால் நீங்கள் தேர்தலில் நின்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான ஆதரவாளர்கள் எங்கள் தொகுதியில் கட்சிப் பணி செய்ய மாட்டார்கள். எல்லோரும் உங்கள் தொகுதிக்கு வந்துவிடுவார்கள். அப்புறம் எங்கள் கதி அதோ கதி தான். இப்போது உள்ள சூழ்நிலையில் நாம் மரியாதையான வாக்குகளை வாங்கினால் தான் நமக்கும் சரி, காங்கிரஸ் கட்சிக்கும் சரி மரியாதையாக இருக்கும். எனவே, நீங்கள் போட்டியிடுவதை சற்று யோசியுங்கள் என சிலர் கூறினார்களாம்.
இதையடுத்தே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தாராம் வாசன்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications