மாதொருபாகன் நாவல் விவகாரம்: பெருமாள்முருகன் நீதிமன்றத்தில் முறையிடலாம் - ஹைகோர்ட்
சென்னை: மாதொருபாகன் நாவல் ஆசிரியர் பெருமாள்முருகன் நீதிமன்றத்தில் முறையிட விரும்பினால் வரட்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் 2010-ம் ஆண்டு எழுதிய மாதொரு பாகன் நாவலின் ஒரு பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட அமைதிக் குழு கூட்டத்தில் நாவலில் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி விடுவதாகவும் இதுவரை விற்காத நாவல்களை திரும்பப் பெறுவதாகவும், இனிமேல் எதையும் எழுதுவதில்லை என்றும் பெருமாள் முருகன் உறுதி அளித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத் தலைவர் தமிழ்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில் நாவல் ஆசிரியர் பெருமாள்முருகனை நிர்பந்தித்து எடுக்கப்பட்ட முடிவு சட்ட விரோதம் என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாவல் ஆசிரியர் பெருமாள்முருகனை அணுகி மனு தாக்கல் செய்யவோ அல்லது அவர் சார்பில் வழக்கை நடத்துவதற்காக ஒப்புதலோ பெறப்படும் என்றார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் சேர்ந்துகொண்டு ஒருவரது பேச்சுரிமை, எழுத்துரிமை பற்றி முடிவெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட விரும்பினால் பெருமாள்முருகன் வரட்டும் என்றனர் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணை 24-ந் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications