For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின் வாங்குகின்றாரா சீமான்?: தமிழர்கள் மத்தியில் பெரும் கேள்வி

|

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரச்சாரம் சூடு பிடிக்காமல் முடங்கிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றது.

Why is Seeman so silent?

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பரப்புரை செய்வேன் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்திருந்தார்.

தற்போது பாஜக தமிழக தலைவர்கள் பலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில், சீமான் அமைதி காத்து வருவதாக ஈழ தமிழர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் வெளிப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் சீமானின் அமைதிக்கு காரணம் புரியாமல் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் தவிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், இதே நிலை நீடித்தால், சீமான் அண்ணாச்சி சொன்னது என்னாச்சி என்ற தலைப்பிட்டு போஸ்டர் ஓட்ட சில தமிழ் அமைப்புகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Tamils are wondering as to why Naam tamilar chief Seeman who voiced against BJP earlier is so quiet during election time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X