ஐடி ரெய்டில் அமைச்சர் விஜயபாஸ்கரை வைத்த பிரேம்குமார்+ "மண்சோறு" புகழ் மாஜி பெண் அமைச்சர்!
அமைச்சர் விஜயபாஸ்கர் ஐடி ரெய்டில் சிக்க காரணமே சேகர் ரெட்டி வகையறாக்களின் நட்புதான் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்
சென்னை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டுக்கு ஆர்கே நகர் பணப்பட்டுவாடா ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் சேகர் ரெட்டி வகையறாக்ளில் ஒருவராக விஜயபாஸ்கர் இருந்ததும்தான் வருமான வரி சோதனைக்கு முக்கிய காரணம் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சேகர் ரெட்டியும் அவரது வகையறாக்களும் நிழல் அரசாங்கத்தையே நடத்தி வந்தனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலா வகையறாக்கள் அனைவருக்கும் பினாமியாக செயல்பட்டவர் சேகர் ரெட்டி.
சேகர் ரெட்டி அவரது நண்பர்கள் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரது வீட்டில் கடந்த டிசம்பர் 8-ந் தேதி அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. இச்சோதனையில் பல கோடி மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின.

பிரேம்குமார்
இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டி வகையறாக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிக்குப் பின்னர் பழைய ரூபாய் நோட்டுகளை தங்கமாக மாற்றுவதில் பிடுபிஸியாக இருந்தவர்தான் சேகர் ரெட்டியின் கூட்டாளி பிரேம்குமார்.

மண்சோறு புகழ் மாஜி அமைச்சர்
பிரேம்குமாருக்கு மாஜி "மண்சோறு" புகழ் மாஜி பெண் அமைச்சர் அவ்வளவு நெருக்கமாம். கருப்பு பணத்தை பிரேம்குமார் மூலமாக தங்கமாக மாற்றுவதில் நேரடியாகவே வந்துபோவாராம் மாஜி பெண் அமைச்சர்.

பிரேம்குமார் செய்தது இதுதான்
அமைச்சர்கள், அதிகார வர்க்கம் நெருக்கம் அதிகமாக அதிகமாக சேகர் ரெட்டி வகையறாக்களும் நட்பாகிவிட்டனர். அமைச்சர்களின் கருப்பு பணம் சேகர் ரெட்டி மூலமாக பிரேம்குமாருக்கு வந்து சேரும். பிரேம்குமார் அவற்றை தங்கமாக மாற்றி தமக்கான கமிஷனை எடுத்துக் கொள்வார். இதனால்தான் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து பிரேம்குமாரும் சிறைக்கு போக நேர்ந்தது.

விஜயபாஸ்கர் பினாமி
இந்த பிசினஸ் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க மண்சோறு புகழ் மாஜி பெண் அமைச்சரின் நட்பால் விஜயபாஸ்கரின் முழுமையான பினாமியாகவே மாறிவிட்டாராம் பிரேம்குமார். சுகாதாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளாராம் விஜயபாஸ்கர்.

சிக்கிய ஆவணங்கள்
இந்த பணத்தின் ஒருபகுதி சசிகலா கோஷ்டிக்கு கப்பமாக போக பெரும்பகுதி பிரேம்குமார் மூலமாகவே தங்கம் மற்றும் சொத்துகளாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறதாம். பிரேம்குமார் வீட்டில் நடத்திய ரெய்டின் போது இது தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கினவாம்.

பதறும் மாஜி அமைச்சர்
விஜயபாஸ்கருக்கு நீண்ட நாட்களாக குறி வைத்து காத்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இப்போதுதான் களத்தில் இறங்கியுள்ளனராம். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில் மண்சோறு புகழ் மாஜி பெண் அமைச்சர் ரொம்பவே பதறியும் போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications