போயஸில் நிகழ்ந்த 'உச்சகட்ட' அவமானத்தால்தான் கொந்தளித்தாரா ஓபிஎஸ்?- பகீர் தகவல்கள்
போயஸ் கார்டனில் நிகழ்ந்த மிக உச்சகட்ட அவமானத்தால்தான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதாக கூறப்படுகிறது.
சென்னை: போயஸ் கார்டனில் மன்னார்குடி கும்பலால் நிகழ்ந்த மிகவும் உச்சகட்ட அவமானத்தால்தான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொந்தளித்து போய் போர்க்கொடி தூக்கியிருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின.
போயஸ் கார்டனுக்கு தாம் வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தாக்கிதான் கையெழுத்து வாங்கப்பட்டது எனக் கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

ஓபிஎஸ்-க்கு அழைப்பு
இதை அதிமுகவின் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் மறுத்து வருகின்றனர். ஆனால் அதிமுக வட்டாரங்களோ, போயஸ் தோட்டத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மன்னார்குடி கோஷ்டி வரவழைத்தது.

ஓபிஎஸ் எதிர்ப்பு
அங்கு முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட வேண்டும் என மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். ஆனால் முதல்வர் ஓபிஎஸ்ஸோ அப்படியெல்லாம் கையெழுத்து போட முடியாது. உங்களுக்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்களிடத்திலும் கடும் எதிர்ப்பு இருக்கிறது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தாக்குதல்
இப்படி பேசியதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த கோஷ்டியின் அதிமுக்கியமான 'தல' முதல்வர் ஓபிஎஸ்ஸை திடீரென தாக்கியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை முதல்வர் ஓபிஎஸ். இதனால் வேறவழியே இல்லாமல் கையெழுத்துப் போட்டுவிட்டு, எனக்கு இந்த அரசியலே தேவை இல்லை; சொந்த ஊருக்கே போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

உறுதி செய்யும் தமிழிசை
ஆனால் மன்னார்குடி கோஷ்டியோ, அதெப்படி அவ்வளவு ஈசியா விட்டுவிடுவோம் எனக் கூறி சில கட்டளைகளை பிறப்பித்திருக்கிறது. இந்த உச்சகட்ட அவமானத்தால்தான் "பொறுத்தது போதும் பொங்கி எழு" என போர்க்கொடி தூக்கியுள்ளார் என அதிர்ச்சி தகவல்களை அடுக்குகிறது அதிமுக வட்டாரங்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாகத்தான் முதல்வர் ஓபிஎஸ்ஸை 'தாக்கி' கையெழுத்தி வாங்கினார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications