"அம்மா" இருக்கும் திசை நோக்கி வணங்குகிறோம் என கூறுவோர் ரெய்டின் போது ஏன் வரலை?- தினகரன் கேள்வி
ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி வணங்குபவர்கள் என கூறுவோர் ரெய்டின்போது ஏன் அந்த இடத்துக்கு வரவில்லை என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி வணங்குபவர்கள் என கூறிக் கொள்ளும் முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் ஏன் அந்த இடத்திற்கு வரவில்லை என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித் துறை சோதனை நடந்தது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடியில் டிடிவி தினகரன் கூறுகையில், ஜெயலலிதா அறையில் சோதிக்க வேலைக்காரர்கள் விடவில்லை.
ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த வாரண்ட் இருக்கா என்று அதிகாரிகளிடம் கேட்டனர். ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றது மனவேதனை அளிக்கிறது. இந்த சோதனையை வருமானவரித்துறை தவிர்த்திருக்க வேண்டும். இந்த ரெய்டில் உள்நோக்கமும், சதியும் உள்ளது.

அழிக்க வேண்டும்
ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடந்த போது முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வரவில்லையே ஏன். இருவருமே சுயநலவாதிகள் என்பது தெரியவருகிறது. எங்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தியாகத்தை செய்வோம்
ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி வணங்குபவர்கள் என்று கூறியோரும் ஏன் வரவில்லை. இயக்கத்தை காப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்வோம். எதற்காகவும் அஞ்சமாட்டோம்.

மனதைரியம் உள்ளது
தினகரன் அச்சத்தில் உள்ளதாக சிலர் கூறுகின்றனர். எனக்கு எந்த அச்சமும் இல்லை. எங்களுக்கு ஜெயலலிதா தைரியத்தை கற்றுக் கொடுத்துள்ளார். ஜெயலலிதா வீட்டில் பாழாகிப் போன லேப்டாப்தான் இருக்கும். இதுபோல் மத்திய அரசை ஏவிவிடுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

அழிவு நிச்சயம்
மோடியும், கருணாநிதியும் சந்தித்த போது அதில் சதி இல்லை. ஆனால் இந்த ரெய்டில் சதி உள்ளது. கத்தி எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் அழிவு. ஆயுதம் எடுத்தவர்களுக்கும் ஆயுதத்தால்தான் அழிவு.

வீடியோ இருப்பதாக உறவினர் தகவல்
சேகர் ரெட்டியின் வீட்டில் குவிந்திருந்ததை போல் ஜெயலலிதாவின் வீட்டில் வைரம் மற்றும் தங்கக் குவியல்கள் இல்லை. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ இருப்பதாக உறவினர் ஒருவர் கூறியதால் நானும் கூறினேன் என்றார் தினகரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications