ஓ.பி.எஸ். மொட்டை போட்டது யாருக்காக?... "அம்மா"வுக்காகவா, இல்லை தம்பிக்காகவா??
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடனனை செலுத்தியது யாருக்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்காகவே அவர் மொட்டை போட்டதாக கூறப்பட்டாலும் கூட தனது தம்பி ஓ.ராஜாவுக்கு வந்துள்ள சோதனை அகல வேண்டும் என்ற கோரிக்கையுடன்தான் அவர் திருப்பதி போய் வந்ததாக சொல்கிறார்கள்.
திருப்பதிக்கு சனிக்கிழமை போயிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அங்கு அவருக்கு விஐபி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விஐபி தரிசனப் பாதையில் அவர் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்தார். மொட்டை போட்ட திருக்கோலத்துடன் போட்டோக்களுக்குப் போஸும் கொடுத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்தை ரங்கநாதர் மண்டபத்தில் அமரவைத்து, அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர். ஓ.பன்னீர் செல்வம் மொட்டை போட வந்திருந்ததை அறிந்து செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் கோவிலுக்கு வெளியே கூடி விட்டனர். ஆனால் அவர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் ஓ.பன்னீர் செல்வம் கிளம்பி்ப் போய் விட்டார்.
இந்த மொட்டையும், நேர்த்திக்கடனும் ஜெயலலிதாவுக்காகத்தான் என்று கூறப்பட்டாலும் கூட தனது தம்பி ஓ.ராஜாவுக்காகவே முக்கியமாக ஓ.பி.எஸ். வேண்டிக் கொண்டதாக சொல்கிறார்கள். பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தவர் ஓ.ராஜா. தலித் பூசாரி தற்கொலை வழக்கில் இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications