கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்தித்தது ஏன்? பரபர பின்னணி
திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை வருகை தந்த பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக திமுக சற்றே அடக்கி வாசித்தது. ஒருகட்டத்தில் பாஜகவை பகிரங்கமாகவே திமுக எதிர்க்கத் தொடங்கியது.

முரசொலி அலுவலகம் விசிட்
கருணாநிதியின் சட்டசபை வைரவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு எதிரான பிரமாண்ட கூட்டணிக்கும் திமுக அடித்தளம் போட்டு வைத்தது. இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றார்.

மோடியும் சந்திக்கிறார்
பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடி இன்று திடீரென கருணாநிதியை சந்தித்து பேசினார்.

திடீர் சந்திப்பு
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் இருந்த நிலையில் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் அரங்கேறியது. இதையடுத்து ஸ்டாலின் அவசரமாக சென்னை திரும்பினார்.

அருண்ஜேட்லி கோரிக்கை
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பிரதமர் மோடி வர வேண்டும் என விரும்பியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிதான் கருணாநிதியையும் சந்திக்கலாமே என பிரதமர் மோடியிடம் கூறினாராம்.

பாஜகவை நெருங்க முயற்சி
இதனை ஏற்றுதான் கருணாநிதியை சந்திப்பது என பிரதமர் மோடி முடிவு செய்தாராம். நீண்டகாலமாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இப்படியான சந்திப்பால் படு உற்சாகமாக இருக்கிறார்களாம்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications