நிர்மலா தேவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் போலீஸ்.. !
ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவியை போலீஸார் படு பாதுகாப்பாக கோர்ட்டுக்கு அழைத்து வருவதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டே இன்று அதிசயத்துடன் வேடிக்கை பார்த்தது.
ஏன் இவருக்கு இத்தனை பாதுகாப்பு, முக்கியத்துவம் என்று பலரும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டனர். நிர்மலா தேவி விவகாரம் பெரும் புதிராகவே இன்று வரை உள்ளது. எதற்காக இவர் மாணவிகளை படுக்கைக்கு அழைத்தார் என்பது பெரும் குழப்பமாக உள்ளது. யாருக்காக அழைத்தார் என்பதிலும் தெளிவு இல்லை.
இவர் கொடுத்ததாக வெளியான வாக்குமூலத்தில் 2 பேருடன் நிறுத்திக் கொண்டார். அது முருகன் மற்றும் கருப்பசாமி. ஆனால் அதையும் தாண்டி பல்வேறு விவகாரங்கள் நிர்மலா தேவிக்குள் அடக்கமாக உள்ளதாக கருதப்படுகிறது. அதையே முருகன் தரப்பும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறது.

["ஆ"... தளங்களை அடியோடு முடக்கிய மத்திய அரசு.. யூடியூபை தேடி ஓடும் ஆபாசகர்கள்! ]
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டுக்கு நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டார். இன்றும் அழைத்து வரப்பட்டார். அவரை அழைத்து வந்தபோது போலீஸார் மிகுந்த பாதுகாப்புடன் கூட்டி வந்தனர். யாரும் அவருடன் பேசி விடாத வகையில் அரண் அமைத்து கூட்டி வந்தனர்.
இன்று அவரை நீதிபதிகள் வரும் பாதையில் கூட்டிச் சென்றது அனைவரையும் வியக்க வைத்தது. அந்த அளவுக்கு நிர்மலா தேவி விஐபியா.. இளம் பிள்ளைகளை ஆபாச வழிக்கு அழைத்துச் சென்ற இவருக்கு எதற்கு இத்தனை முக்கியம் என்று பலரும் முனுமுனுத்தனர். ஆனால் நிர்மலா தேவி தப்பித் தவறிக் கூட யாரிடமும் எதையும் பேசி விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் போலீஸார் இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.
எப்படியோ நிர்மலா தேவியும் விஐபியாகி விட்டார்!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications