6 அமைச்சர்களை பந்தாடிய சபீதாவை தூக்கியடித்த செங்க்ஸ்.. பரபர பின்னணி
முதல்வர் ஜெயலலிதாவை ஆண்ட்டி என்று பாசத்தோடு அழைத்த பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா, 6 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை பந்தாடியவர், அவரை செங்கோட்டையன் தூக்கியடித்ததன் பரபர பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலராக பதவி வகித்த சபீதா ஐஏஎஸ், கடந்த 6 ஆண்டுகாலமாக அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்தார். ஜெயலலிதாவிடம் செல்வாக்காக இருந்ததால் 6 அமைச்சர்களை பந்தாடியவர் என்ற பெருமை உண்டு. அவரையே தூக்கியடித்து விட்டார் தற்போதைய அமைச்சர் செங்கோட்டையன்.
சபீதா துறை மாறிய உடனேயே பள்ளிக்கல்வித்துறைக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது போல பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்த சபீதாவை அமைச்சர் பதவிக்கு வந்த 20 நாட்களுக்கும் இடம் மாற்றி விட்டார் செங்கோட்டையன்.
ஜெயலலிதா ஆதரவு நிலையுடன் பள்ளிக்கல்வித்துறையில் செல்வாக்குடன் வலம் வந்த சபீதாவை செங்கோட்டையன் செல்லாக்காசாக்கியது எப்படி என்பது பற்றி தலைமைச் செயலக வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

சபீதா ஐஏஎஸ்
ஜாதகத்தில் குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறையும் சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும் நடக்கும் ஆனால் ஆளுங்கட்சி, அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அட்ஜஸ்ட் செய்து செல்லாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் இடப்பெயர்ச்சி அடிக்கடி நடக்கும். ஆனால் பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்த சபீதா ஐஏஎஸ் அசைக்கமுடியாத அளவிற்கு செல்வாக்குடன் இருந்தார் காரணம் ஜெயலலிதா உடனான நெருக்கமே.

1991 முதலே நெருக்கம்
ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பதவியேற்ற 1991ஆம் ஆண்டு முதலே நெருக்கமாக இருந்து குட்புக்கில் இடம்பிடித்தாராம் சபீதா. ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் ஜெயலலிதாவை மேடம் என்று அழைக்க சபீதா மட்டுமே ஆண்ட்டி என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கமானார்.

திமுக டூ அதிமுக
2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதய திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலராக நியமிக்கப்பட்டார் சபீதா. 2011 மே மாதம் திமுக ஆட்சி மாறி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னரும் அதே துறையில் கோலோச்சினார். ஜெயலலிதா பங்கேற்கும் அனைத்து விழாவிற்கும் தவறாமல் ஆஜராகிவிடுவாராம்.

விழா ஏற்பாடுகள்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தபோதும் இவர்தான் ஜெயலலிதாவால் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதா கடந்த ஆண்டு 2வது முறையாக முதல்வராக பதவியேற்றபோது, சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சபீதாதான் செய்தாராம்.

பந்தாடப்பட்ட அமைச்சர்கள்
சபீதாவின் நடவடிக்கைகளில் தலையிட்டதால், கடந்த 6 ஆண்டுகளில் 8 அமைச்சர்களை பார்த்துள்ளார் சபீதா. அமைச்சர்கள் மாறினாலும் இவர் மட்டுமே அசையாமல் இருந்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகைச்செல்வன், வீரமணி, பழனியப்பன், பெஞ்சமின் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் பந்தாடப்பட்டனர். மாஃபா பாண்டியராஜன் ஓபிஎஸ் அணிக்கு போனதால் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார் அங்கேதான் சபீதாவிற்கு சனிதிசை ஆரம்பமானது என்கின்றனர்.

ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதாவின் மரணம் அவரது ஆதரவு ஐஏஎஸ் அதிகாரிகள் பலருக்குமே இறங்குமுகமாகிவிட்டது. பல அதிகாரிகள் தாங்களாகவே வெளியேறி விட்டனர். சபீதாவும் இப்போது வேறு துறைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். பல அமைச்சர்களை தனது அதிகாரத்தால் அசைத்த சபீதாவை அங்கிட்டு போய் உட்காரு என்று தூக்கியடித்து விட்டார். இதற்கான பின்னணியில் அதிகார மோதல்தான் என்கின்றனர் தலைமைச்செயலக அலுவலர்கள்.

அதிகார தோரணை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதில் இருந்தே சபீதாவிற்கு நேரம் சரியில்லை என்கின்றனர். பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் அனைத்தும், சபீதாவின் அலுவலகத்தில்தான் நடைபெற்று வந்தது. ஆனால், செங்கோட்டையன் அமைச்சர் ஆனதும், அவரது அறைக்குத்தான் சபீதா உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

செங்க்ஸ் இடம் செல்லுமா?
கடந்த சில நாட்களாக அமைச்சருக்கும், சபீதாவுக்கும் பனிப்போர் நீடித்தது. இது பிளஸ் 2 தேர்வு தொடங்கிய போது ஆய்வுக்கு சென்ற போதே வெளிப்படையாக தெரிந்தது. சபீதா சரிப்பட்டு வரமாட்டார். அவரை மாற்றிவிடுங்கள் என்று முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் செங்கோட்டையன் அழுத்தம் கொடுத்ததன் பேரிலேயே சபீதா மாற்றப்பட்டுள்ளார் என்கின்றனர். சபீதாவின் இடமாற்றத்தை பலரும் சுவீட் எடு கொண்டாடு என்று கொண்டாடி வருகிறார்களாம். செங்கோட்டையனை எதற்கு வாழ்த்துகிறார்களோ இல்லையே சபீதாவை தூக்கியடித்ததற்கு நிச்சயம் வாழ்த்துவார்கள் என்கின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications