திமுக அமைப்பு செயலர் கலியாணசுந்தரம் ராஜினாமாவும் திடீர் 'கலகக் குரலும்'... பரபரப்பு பின்னணி!
சென்னை: திமுக அமைப்புச் செயலர் பெ.வீ. கலியாணசுந்தரம் திடீரென தமது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் திமுக தலைமைக்கு பரபரப்பான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதன் பின்னணியில் அழகிரி- ஸ்டாலின் மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மு.க. அழகிரி திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போதிருந்து விரைவில் கட்சி தம் வசம் வரும் என்று பேட்டி கொடுத்து வருகிறார்.

கல்யாணசுந்தரம் ராஜினாமா
திமுக தலைவர் கருணாநிதியும் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென திமுக அமைப்புச் செயலர் பெ.வீ. கல்யாணசுந்தரம் தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கருணாநிதி கட்டளை?
கல்யாணசுந்தரம் தானாக ராஜினாமா செய்யவில்லை... திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டதாலேயே அவர் ராஜினாமா செய்தார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகிரியின் முக்கிய கோரிக்கை
அதாவது திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று தலைமையகமான அறிவாலயத்தை முதலில் சீரமையுங்கள் என்பதுதான்.. அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்களே இருப்பதால் கட்சி தொண்டர்களின் உண்மை குமுறல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை என்பது அழகிரியின் புகார்.

அழகிரி கோரிக்கை ஏற்பு?
தற்போது அழகிரியை சமாதானப்படுத்தும் வகையில்தான் அறிவாலயத்தில் மிக முக்கிய பொறுப்பான அமைப்பு செயலர் பதவி வகிக்கும் இருந்த ஸ்டாலின் ஆதரவாளர் கல்யாணசுந்தரத்தை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார் கருணாநிதி என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.

கனிமொழி சந்திப்பு
இந் நிலையில் சமீபத்தில் விமானத்தில் அழகிரியும் கனிமொழியும் சந்தித்து பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பொறுமையாக இருங்கள்.. என்று அழகிரியிடம் கனிமொழி கூறியதும் இதனை முன்வைத்துதான் எனக் கூறப்படுகிறது.

கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்
இதனிடையே தமது ஆதரவாளர் கல்யாணசுந்தரத்தை ராஜினாமா செய்ய கருணாநிதி உத்தரவிட்டதால் கோபத்தின் உச்சிக்குப் போயுள்ளார் மு.க.ஸ்டாலின். தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்தான் கல்யாணசுந்தரத்தை 'கலகக் குரல்' கடிதத்தை எழுத வைத்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இன்னும் என்னென்ன வெடிக்குமோ?












Click it and Unblock the Notifications