தமிழ்நாட்ல, இந்த சமயத்துல ஏன் இவ்ளோ மழை தெரியுமா..? ரமணன் சொல்றதைக் கேளுங்க!
சென்னை: லட்சத் தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகத்தான் தமிழகம் முழுக்க மழை பெய்து வருவதாக வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் படாத பாடுபடுத்தி வந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வாராது வந்த மாமணி மாதிரி மக்கள் இந்த மழையைக் கொண்டாடினர்.

குறிப்பாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இந்த மழை தந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இன்றும் இந்த மழை தொடருமா? என்ன சொகிறார் ரமணன் என்பதுதான் பலரது கேள்வியும்.

"லட்சத்தீவின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 24 டிகிரி வெப்பமும் நிலவும்" என்கிறார் ரமணன்.
அவர் வாய் முகூர்த்தம்... காலையிலிருந்து சென்னையில் நல்ல வெயில். மற்ற பகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான்!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications