பரபரப்பை ஏற்படுத்தி புஸ்ஸாகி ஓய்ந்த... ஆளுநர் - அமைச்சர்கள் சந்திப்பு! #jayalalithaa

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் சந்தித்தது ஏன் என்பது தமிழகம் முழுவதும் இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

கன்னி்யாகுமரி முதல் திருவள்ளூர் வரை இன்று மாலை இிந்த சந்திப்புகளால் பெரும் பரபரப்பாகி விட்டது. யாரைப் பார்த்தாலும் என்ன ஆச்சு, இடைக்கால முதல்வர் நியமிக்கப்பட்டு விட்டாரா என்ற கேள்வியுடன் போன்களை துளைத்து எடுத்து விட்டனர்.

Why the ministers met the Governor?

ஒரே நாளில் இருமுறை தலைமைச் செயலாளர் பொறுப்பு ஆளுநரைச் சந்தித்ததும், உச்சகட்டமாக தமிழகத்தின் இரு முக்கிய அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்ததும் பல்வேறு ஹேஷ்யங்களைக் கிளப்பி விட்டு விட்டது.

அப்பல்லோவுக்கு வெளியே கூடியிருந்த அதிமுகவினர்தான் இந்த செய்திகளால் பெரும் பரபரப்பாகினர். அதேபோல தமிழகம் முழுவதும் இது காட்டுத்தீ போல பரவி விட்டது. விரைவில் இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படலாம் என்ற யூகமே கொடி கட்டிப் பறந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பியோர் மத்தியிலும் இந்த சந்திப்பு பரபரப்பையும், சற்று பதட்டத்தையும் கூடவே ஏற்படுத்தி விட்டது. மொத்தத்தில் இன்றைய மாலை அமைச்சர்களின் சந்திப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+