மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா விலகியது ஏன்? சொல்கிறார் ஜிகே வாசன்
ஈரோடு: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா விலகியது ஏன் என்பதற்கு என தமாகா தலைவர் ஜிகே வாசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்ட த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோடு திண்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறுகையில், சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்த உள்ளோம். இதற்காகத் தான் மக்கள் நல கூட்டணியில் இருந்து தமாகா விலகுவது என முடிவு செய்தோம்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்வதில் எந்தவித குளறுபடியும் ஏற்படாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் தமாகா மாநில இளைஞர் அணி செயலாளர் யுவராஜ், பொதுச்செயலாளர் விடியல் சேகர், உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications