மத்திய அரசை விமர்சிக்காதீங்க... எடப்பாடியின் 'திடீர்' உத்தரவுக்கு காரணம் இதுதான்!
மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என அமைச்சர்களுக்கும் அதிமுகவினருக்கும் முதல்வர் எடப்பாடி திடீர் என உத்தரவிட்டிருப்பது டெல்லியை சமாதானப்படுத்ததான் என்கிறது கோட்டை தகவல்கள்.
சென்னை: மத்திய அரசை யாரும் விமர்சித்து பேசக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பதே டெல்லியின் கோபத்தை தணிக்கத்தான் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
கோட்டையில் அண்மையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைவிட தலைப்புச் செய்தியாக இருந்தது 'எடப்பாடியின் திடீர் உத்தரவுதான்'.

எடப்பாடி உத்தரவு
அதாவது மத்திய அரசை விமர்சித்து யாரும் பேச வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டார் என்பதுதான் முதல் பக்க செய்திகளில் இடம் பிடித்தது. அதேபோல் அதிமுகவினருக்கும் உத்தரவிடப்பட்டது. இதற்கு காரணமே சசிகலாவின் கணவர் நடராஜன் என கூறப்படுகிறது.

ஓடும் நடராஜன்
தாம் செய்த லாபிகளால் கடுப்பாகிப் போன டெல்லி தமக்கு குறிவைத்துவிட்டதால் ஓடிக் கொண்டிருக்கிறார் நடராஜன். இப்படி ஓடிக் கொண்டே சில காய்நகர்த்தல்களையும் செய்து வருகிறார்.

சமிக்ஞைதானாம்...
இதில் ஒன்றுதான் தமிழக அரசு உங்களை எதிர்க்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்கிற சமிக்ஞை. அதனால்தான் இச்செய்தியை முதல் பக்கத்தில் போடுங்கள் என பத்திரிகைகளுக்கு தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

துரத்தும் வரை விடாது கருப்பு
ஆனாலும் இந்த பூச்சுற்றுதல் வேலையை நம்பி டெல்லி ஏமாறாது என்றே கூறப்படுகிறது. ஒட்டுமொத்த சசிகலா கோஷ்டிக்கு லாடம் கட்டி அரசியலைவிட்டே துரத்தும் வரை டெல்லி ஓய்ந்துவிடாது என்றே கூறப்படுகிறது.
-
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications