அண்ணாமலை பேச்சை திரித்து படுதீவிரமாக 'அந்த' அரசியல் செய்கிறாரே திருமாவளவன்.. இப்படி ஒரு சர்ச்சை!

திருமாவளவனின் திடீர் அரசியல் சீற்றம் பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுக்கு எதிராக திடீரென சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சை திரித்து அதையே சாக்காக வைத்து தமக்கான அரசியல் அதிருப்தியை கொட்டுவதற்காக, அணிசேர்ப்பதற்காகவே திருமாவளவன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது: சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும். இவ்வாறு திருமாவளவன் பதிவிட்டிருந்தார். அத்துடன் சென்னையில் அண்ணாமலை பேசிய வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

Annamalaithiruma

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னையில் தமிழ்நாடு பாஜக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இதில் பேசிய முன்னாள் ராணுவ வீரர்கள், தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்து பேசியிருந்தது சர்ச்சையானது. அப்படிப் பேசிய பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் மீது போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதையே திருமாவளவன் பகிர்ந்திருந்தார். ஆனால் அண்ணாமலை பேசுகையில், கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ10 லட்சம் காசோலை அளிக்கிறோம். அதைத் தாண்டி இரு குழந்தைகளையும் காலத்துக்கும் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கட்சியின் தலைவர்கள் இருக்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எதற்கு இதை செய்கிறோம் எனில் பார்டரில் இருக்கக் கூடிய ஒரு ஒரு ராணுவ வீரருக்கும் இங்கே இருந்து ஒரு உரக்கமாக ஒரு செய்தியை சொல்லுகிறோம். அரசு உங்களோடு இல்லை என்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சதை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும். எதற்கும் பயப்படாமல் பார்டரில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரனும் கூட இந்தியன் ஆர்மியில் இந்த பேட்சைப் போட்டுகிட்டு சொல்வீங்க என்று பேசியிருந்தார். அதாவது பார்டரில் இருக்கக் கூடிய ராணுவ வீரர்களுக்காக அண்ணாமலை அப்படி பேசியிருந்தார். ஆனால் திருமாவளவன், தமிழ்நாட்டை மையமாக வைத்துதான் அண்ணாமலை பேசியதாக பதிவிட்டிருந்தார். திருமாவளவனின் ட்விட்டர் பதிவிலும் இதற்கு பதில் தரப்பட்டிருந்தது.

thirumavalavanverlmurugan

இந்நிலையில் சென்னையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பாஜகவை கண்டித்து நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவாக தலைவர் வேல்முருகன், மதிமுக துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசிய பேச்சுகள் அனைத்தும் தமிழ்நாடு பாஜகவை மிக கடுமையாக விமர்சித்திருந்தாலும் போகிற போக்கில் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு காவல்துறையையும் காட்டமாக சாடியிருந்தார். இதனையே தமது ட்விட்டர் பக்கத்திலும் இடைவிடாமல் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலைப்பாடு தொடர்பாக நாம் அரசியல் பார்வையாளர்களிடம் பேசிய போது, அண்ணாமலை பேசியது பார்டரில் உள்ள ராணுவ வீரர்களை நோக்கித்தான் என்பது அந்த பேச்சை கேட்ட அனைவருக்கும் தெரியும். அது திருமாவளவனுக்கும் தெரியும். இருந்தபோதும் திருமாவளவன் இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் மாற்றங்கள் நிகழப் போகிறது; அதாவது பாமக, திமுக அணிக்கு வந்துவிடும் என்பது உறுதியாகிவிட்டதாக நினைக்கிறார் போல. இதனை உணர்ந்துதான் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். இப்போது அடுத்த கட்டமாக வேல்முருகன் உள்ளிட்டோரை இணைத்துக் கொன்டு வருகிறார். இத்தனைக்கும் காரணம் லோக்சபா தேர்தலை முன்வைத்த அரசியல்தான். லோக்சபா தேர்தலின் போது அணி மாறுவதற்கான அறிகுறியைத்தான் இப்படியான ஒரு நடவடிக்கை மூலம் வெளிப்படுத்துகிறார் திருமாவளவன் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+