தேர்தல் கூட்டணியில் திமுகவை கழற்றிவிட விஜயகாந்த் முடிவு செய்தது ஏன் தெரியுமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவை தவிர்த்துவிட்டு, தேமுதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்ததன் பின்னணியில், பிரேமலதா விஜயகாந்த்தின் தொலை நோக்கு பார்வை உள்ளதாக சிலாகிக்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
சட்டசபை தேர்தலில் திமுகவோடு கூட்டணி இல்லை என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெளிவாக கூறிவிட்டார்.
தேமுதிக தலைமையில் புதிய கூட்டணி தேர்தலில் களம் காண ஆயத்தமாக வசதியாக விஜயகாந்த் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, பல சிறு கட்சிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மாற்று அரசியல்
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி உருவாக வேண்டும், அது தேமுதிகவாக இருக்க வேண்டும் என்பதே, விஜயகாந்த் அக்கட்சியை தொடங்க மூல காரணம்.

தனித்து போட்டி
தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட போது தனித்து போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜயகாந்த் இருந்தார். அதன்படி, 2006 சட்டசபை மற்றும் 2009 லோக்சபா தேர்தல்களில் தேமுதிக தனித்து போட்டியிட்டு, பெரும் வாக்குகளை ஈட்டியது.

அதிமுகவுடன் கூட்டணி
ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக, அதிமுகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்டது தேமுதிக.

தேமுதிக உடைபட்டது
ஆனால், தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிகவை உடைத்து சில எம்.எல்.ஏக்களை அதிமுக தனக்கு ஆதரவாக இழுத்த சம்பவங்களும் நடந்தேறின.

மோடி அலை
எனவே, 2014 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கிடையாது என்று தேமுதிக அறிவித்தது. இந்த இருகட்சிகளை வீழ்த்த மோடி அலையை பயன்படுத்தி, கட்சிக்கு டெல்லியில் செல்வாக்கு பெற்றுத்தர விஜயகாந்த் முயற்சி செய்தார்.

திமுக படுதோல்வி
தேமுதிக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காவிட்டாலும், இக்கூட்டணியால் விஜயகாந்த்துக்கு கிடைத்த பலன், திமுகவை ஒரு இடத்திலும் வெற்றிபெறச் செய்ததுதான். அதேநேரம், விஜயகாந்த் சார்ந்த கூட்டணி தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிகளை வென்றது.

திமுக பக்கம் போக பயம்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சென்றால், அதிமுக ஆட்சியில் என்ன நடந்ததோ, அதேதான் திமுக வந்தபின்னும் நடக்கும் என விஜயகாந்த் அஞ்சுகிறார். எம்எல்ஏக்களை இழுப்பது, கட்சியினரை அழைப்பது என தேமுதிகவை உடைக்க திமுக முயற்சிக்கக் கூடும். எனவே, திமுக கூட்டணி வேண்டாம் என்று விஜயகாந்த் முடிவெடுத்துள்ளாராம்.

அவப்பெயர்
தேமுதிகவின் தனித்துப் போட்டி முடிவால் இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும், கட்சி மீதான நம்பிக்கையை மக்களிடம் மீட்டெடுக்க முடியும். இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தவர்தானே என்ற அவப்பெயரில் இருந்து விஜயகாந்த் தப்புவார்.

மாற்று கட்சி
இது வருங்கால தேர்தல்களில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற அளவில் தேமுதிகவுக்கு அது பெரிய அளவில் கை கொடுக்கும். தனியாக இயங்குவதன் மூலம், தற்போதைய நிலையில் பலம் குறைந்துள்ள திமுகவை வீழ்த்தி அந்த இடத்தை தேமுதிக பிடிக்க முயல்கிறது.

எதிர்காலம்
இதன்மூலம், அதிமுகவுக்கு ஒரே போட்டியாக தேமுதிகவை மாற்ற முடியும் என்பது விஜயகாந்த்தின் எண்ணம். அதிலும் குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த்தின் எண்ணமாக உள்ளது. வருங்காலத்தை மனதில் கொண்டே திமுக பக்கம் போகவே கூடாது என்று பிரேமலாத கறார் காட்டியுள்ளார்.

பொருளாதாரம்
அதேநேரம், தேமுதிகவின் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் பொருளாதார ரீதியாக வலுவற்ற பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதிமுகவுடனான கூட்டணி வெற்றி பெற்றாலும் நன்மை ஏதும் ஏற்படவில்லை.

அதிருப்தி
திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கிற பட்சத்தில், அந்தக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நிர்வாகிகள் அதனை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பால் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

பாஜக பக்கம்
தேர்தல் செலவு, வாக்குச் சேகரிப்பு போன்ற பணிகள் பெரும் சவாலாகவே இருக்கும் என்பதை பிரேமலதாவும் உணர்ந்துள்ளார். எனவேதான், கட்சியை காப்பாற்றும் நோக்கத்தில், பாஜகவோடு கூட்டணி அமைக்கலாம் என பிரேமலதா நினைக்கிறார். இதன்மூலம், தேர்தல் செலவை பாஜக பகிர்ந்து கொள்ளும் என்று நம்புகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications