ஆர்.கே.நகரில், விஷால் யாரை எதிர்த்து, எதற்காக போட்டியிடுகிறார்?- அமீர் சரமாரி கேள்வி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவது ஏன்? - அமீர் கேள்வி
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் அவர் யாரை எதிர்த்து எதற்காக போட்டியிடுகிறார் என்று இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகியுள்ளார். இப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் விஷால்.

இந்த நிலையில்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஷால். சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.
விஷால் அறிவிப்பு குறித்து கருத்து கூறியுள்ள இயக்குநர் அமீர், ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று கூறியுள்ளார். யாரை எதிர்த்து எந்த நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால் எனவும் இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
