என் புருஷன் கொலைகாரனா.. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தனது கணவர் இரட்டைக் கொலைகளைச் செய்தவர் என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது ஆசிரியை மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை சேர்ந்தவர் உஷா. இவர் கடந்த ஜீலை மாதம் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்ட 30வது நாள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சித்தேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அரக்கோணத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த அவரது மகள் தமிழ்செல்வியை சோளிங்கர் அடுத்த பாராஞ்சி என்ற இடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இரண்டு வழக்குகளையும் இரு ஊர் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சித்தேரியைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் இருவரையும் கொன்றது தெரிய வந்தது. இந்த நிலையில் சுரேஷ் பாபுவின் மனைவி கலைவாணிக்கு இது தெரிய வந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஆசிரியை ஆவார்.
தனது கணவர் கொலைகாரர், அதுவும் இரட்டைக் கொலைகளைச் செய்தவர், அதுவும் பெண்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தவர் என்று அறிந்ததும் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நேற்று தனது வீட்டில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications