"என் கண்மணி என் காதலி.. உனை பார்த்ததும்".. காமம் தலைக்கேறி உளறிய கணவர்.. தூக்கில் தொங்கிய மனைவி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: "என் கண்மணி காதலி.. எனக்கு எல்லாமே கண்மணிதான்.. பேசாம, நீ செத்து போயிடு" என்று கணவன் சொல்லி கொண்டே இருந்ததால், மனம் உடைந்த மனைவி தூக்கில் தொங்கிவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.. இவரது கணவர் ப்ரதீப்.. 38 வயதாகிறது.. வேலைக்கு போவது கிடையாது.. எப்ப பார்த்தாலும் தண்ணி தான்.

wife committed suicide near chengalpattu

தினமும் தண்ணி அடிச்சிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வதுதான் பொழப்பு.. இந்த சமயத்தில் திடீரென கள்ளக்காதலியும் கிடைத்து விட்டார்.

அவர் பெயர் கண்மணி.. வீட்டில் இருக்கிற நகைகளை எல்லாம் எடுத்து கொண்டு போய் கண்மணிக்கு தந்துவிடுவாராம்.. அந்த அளவுக்கு லவ்.. இதனாலேயே பிரதீப்புக்கும் ஜெயலட்சுமிக்கும் தகராறு அதிகமாகி வந்திருக்கிறது.

கள்ளக்காதலை விட்டுவிடுமாறு ஜெயலட்சுமி கெஞ்சி வந்துள்ளார்.. எனக்கு எல்லாமே கண்மணிதான்.. "நீ இருக்கிற வரை என்னால ஜாலியாக வாழ முடியாது.. என்கூட வாழற தகுதி உனக்கு இல்லவே இல்லை.. நீ செத்து போயிடு.." என்று ஜெயலட்சுமியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி தகராறு நடந்து வந்த நிலையில்தான், நேற்று ஜெயலட்சுமி தூக்கில் தொங்கிவிட்டார்.. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயலட்சுமியின் சொந்தக்காரர்களுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. அவர்கள் வருவதற்குள் பிரதீப்பும், அவரது அம்மாவும் சேர்ந்து ஜெயலட்சுமி சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டனர்.. விரைந்து வந்த மானாம்மதி போலீசார் சடலத்தை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், ஜெயலட்சுமி உறவினர்கள் இதுவரை இதுவரை சடலத்தை பார்க்கவே இல்லை.. அவர் எப்படி இறந்தார் என்று தெரியவேண்டும், சாவில் மர்மம் உள்ளது என்று ஒரு குற்றச்சாட்டை எழுப்பினர்.. மேலும், ப்ரதீப்பை கைது செய்யும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர்..

ஆனால்,"கொரோனா பணி நிறைய நிறைய இருப்பதால் விசாரணை செய்ய நேரமில்லை. சடலத்தை வாங்கி செல்லுங்கள்" என்று அலட்சிய என அலட்சியமாக பதில் கிடைக்கவும், ஆர்டிஓவை நேரில் சந்தித்து சொந்தக்காரர்கள் முறையிட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முன்பு ஜெயலட்சுமி ஒரு 4 பக்கத்திற்கு ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளாராம்.,. கண்மணியுடன் உறவு வைத்திருக்கும் பிரதீப் இப்போது வரை வாயே திறக்கவில்லை.. இறந்துபோன ஜெயலட்சுமி பிரதீப்புக்கு 2வது மனைவியாம்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+