குடிகார கணவனின் கழுத்தை அறுத்த மனைவி! அரிவாளுடன் போலீசில் சரண்!!
சிவகங்கை: சிவகங்கை அருகே குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த கணவனை மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சோணைமுத்து. இவரது மகன் பாரிமன்னன் (வயது28), ஆட்டோ டிரைவர். இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும், பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாரிமன்னன் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று விடுவதால் அவனது 2 மனைவிகளும் வெறுப்படைந்தனர்.
இதனால் முத்துமாரி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கும், பிரவீனா, அரியலூர் தென்மாபட்டு பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கும் சென்று விட்டனர்.
நேற்று இரவு தென்மாபட்டுக்கு சென்ற பாரிமன்னன் மனைவி பிரவீனாவுடன் தகராறு செய்துள்ளார். குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனா, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பாரிமன்னன் கண்களில் வீசினார். இதில் நிலைகுலைந்த அவனை, பிரவீனா கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்றும் பாராமல் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாரிமன்னன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து பிரவீனா கையில் அரிவாளுடன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவியே கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications