செல்போன் பேச்சால் வினை: சந்தேகப்பட்டு ஊரை கூட்டிய கணவன்.. தூக்குபோட்ட மனைவி.. திருச்சி அருகே சோகம்
Recommended Video

திருச்சி: செல்போன் பேச்சு தொடர்பான சந்தேகத்தில் ஏற்பட்ட சண்டையில் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே நடந்துள்ளது.
திருச்சி-திண்டுக்கல் சாலை இனாம்மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் வேலுச்சாமி (30). பிளம்பர். ஐஸ்வர்யா (21) என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் ஒரு செல்போன் அழைப்பால், தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை வேலை விஷயமாக வேலுச்சாமி திருச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது, ஐஸ்வர்யா யாருடனோ செல்போனில் பேசியதை பார்த்து வேலுச்சாமி சந்தேகமடைந்துள்ளார்.

செல்போனால் தகராறு
வேலுச்சாமி இதுகுறித்து கேட்டதற்கு தனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். சந்தேகம் தீராத வேலுச்சாமி, ஐஸ்வர்யாவிடம் போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, ஐஸ்வரியா அவசர அவசரமாக பேசிய நம்பரை கால் பதிவில் இருந்து அழித்துவிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கணவன்-மனைவி சண்டை
இதை பார்த்து மேலும் சந்தேகப்பட்ட வேலுச்சாமி, ஐஸ்வர்யாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். ஐஸ்வர்யா தந்தை, தாய்க்கும் அதுபற்றி தகவல் கொடுத்துள்ளார்.
வேலுச்சாமியின் அண்ணன் தகவல் அறிந்து வந்து, தம்பதிகளை சமாதானம் செய்து வைத்துள்ளார். ஆனால், ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா வீட்டுக்கு வர வேண்டும் என்று வேலுச்சாமி பிடிவாதம் காட்டியுள்ளார்.

மனைவி தற்கொலை
இதன்பிறகு வேலுச்சாமி கடைத்தெரு சென்ற நேரத்தில், கதவை பூட்டிக்கொண்டு ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வரதட்சணை புகார்
ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். செல்போன் எண்ணை அழித்ததும், பெற்றோர் முன்னிலையில் நியாயம் கேட்பேன் என்று கணவன் சொன்னதும் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், ஐஸ்வர்யா பெற்றோர், இது வரதட்சணை கொடுமையால் நடந்த தற்கொலை என கூறி புகார் அளித்துள்ளனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications