உருட்டைக்கட்டையால் கணவனைப் புரட்டி எடுத்த மனைவி.. அடி வாங்கியவர் ராணுவ வீரராம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உருட்டுக்கட்டையால் முன்னாள் ராணுவ வீரரான தனது கணவரைத் தாக்கிய மனைவி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஆம்பள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறார். இவரது மனைவி ரெஜினா. இந்தத் தம்பதியினருக்கு விஸ்வநாதன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், இந்தத் தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அதே பகுதியில் தம்பதியினர் இருவரும் தனித் தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு, கிருஷ்ணன் ஆம்பள்ளிக்கு வந்தாராம். மனைவி ரெஜினா வீட்டுக்குச் சென்று மகன் விஸ்வநாதனிடம் பேசிக்கொண்டிருந்தராம்.
அப்போது, அங்கு வந்த ரெஜினாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரெஜினா, வீட்டிலிருந்த உருட்டுக் கட்டையால் தாக்கியதில் கிருஷ்ணன் தலையில் காயமடைந்து மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில், மத்தூர் உதவி காவல் ஆய்வாளர் வீரமணி, ரெஜினா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications