Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்!

நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை கொன்ற கணவன் போலீஸில் சரணடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்!- வீடியோ

    கும்பகோணம்: கும்பகோணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தலையில் கியாஸ் சிலிண்டரை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளி கணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

    கும்பகோணத்தில் சாக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பஷீர் முகமது. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பஷீருக்கு ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து பெற்று மூன்றாவதாக பாத்திமா 33, என்பவரை திருமணம் செய்துள்ளார். பாத்திமா ஏற்கனவே திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவன் ஓடிவிட்டார்.

    Wife killes due to family dispute in Kumbakonam

    பின்னர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பசீர் அகமதுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    பஷீர் அகமது வெளிநாட்டில் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஷீர் மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பாத்திமா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பஷீர் அகமது, ஜமாத் மூலம் பேசி இருவரும் மறுபடி ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பாத்திமா தூங்கிக் கொண்டிருந்தபோது பஷீர் அகமது ஆத்திரமடைந்து எரிவாயு சிலிண்டர் எடுத்து மண்டையில் அடித்து கொலை செய்தார். இதில் பாத்திமா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    Wife killes due to family dispute in Kumbakonam

    மனைவி இறந்ததை அறிந்த பஷீர் அகமது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவலறிந்த நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளர் ஜெயகௌரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.,

    இதனிடையே, மனைவியை கொன்று தப்பி ஓடிய பஷீர் அகமது, இன்று காலை நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+