தென்காசி: குடிகார கணவனை எரித்து கொலை செய்த மனைவி
திருநெல்வேலி: குடித்து விட்டு வந்து தினசரி அடித்து உதைத்த கணவனை தொந்தரவு தாங்காத மனைவி கொலை செய்து எரித்துள்ள சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட நபரின் பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கீழப்பாவூரில் வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான சிவராம கிருஷ்ணனுக்கும் இதேப் பகுதியை சார்ந்த மல்லிகா என்பவருக்கும் சுமார் 1௦ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிவராம கிருஷ்ணன் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியை அடிப்பது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்படவே கோபமடைந்த மல்லிகா தனது குழந்தைகளை அருகிலுள்ள தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சிவராம கிருஷ்ணன் வீட்டில் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் பாவூர் சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்தியதில் சிவராமகிருஷ்ணனை அவரது மனைவி, மற்றும் உறவினர்கள் அடித்து, எரித்து கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து மல்லிகாவை கைது செய்த போலீசார் மோப்ப நாய் உதவியோடு இந்த கொலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் வீட்டிற்குள் ஒருசாக்குப்பை சிக்கியது அதில் ரத்தக்கறை படிந்த துணிமணிகள் இருப்பதும், இதை கொலையாளிகள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. மனைவியே கணவனை கொடுரமாக கொலை செய்து எரித்து கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications