”ஹனிமூன்” சென்ற பெண் கொடைக்கானலில் மாயம் - காதலனுடன் ஓட்டம் என கணவன் புகார்!
கொடைக்கானல்: கொடைக்கானலில் தேனிலவுக்குச் சென்ற இளம் பெண் திடீரென்று மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த நேமிசந்த் என்பவருடைய மகன் விக்னேஷ். இவர் கொடைக்கானல் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், "எனக்கும், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜ்மல் என்பவருடைய மகள் வர்ஷாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களாக நாங்கள் குடும்பம் நடத்திவந்தோம். சில நாட்களுக்கு முன்பு தேனிலவுக்காக வெளியூர் போகலாம் என்று வர்ஷா கேட்டார்.
அப்போது நான் ஊட்டிக்கு போகலாம் என்றேன், வர்ஷா கொடைக்கானல் போகலாம் என்றார். அதை ஏற்று கடந்த 25 ஆம் தேதி கொடைக்கானலுக்கு வந்தோம். இங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி 3 நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தோம்.
27 ஆம் தேதி இரவு வர்ஷா என்னிடம் நான் திருமணத்துக்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்தேன் என்றும், என்னை அவருடன் அனுப்பிவிடுங்கள் என்றும் கேட்டார். அதை நான் ஏற்காமல் வர்ஷாவுக்கு அறிவுரை வழங்கினேன்.
மறுநாள் அதிகாலையில் நான் அயர்ந்து தூங்கியபோது வர்ஷா எழுந்து சென்றுவிட்டார். காலை 7.30 மணிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எனது காதலனுடன் சென்றுவிட்டேன். என்னுடைய பெற்றோருக்கும் இதை தெரிவித்துவிடவும் என்று கூறிவிட்டு செல்போனை அணைத்துவிட்டார். நான் சென்னை சென்று பல்வேறு இடங்களில் வர்ஷாவை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது கடத்தலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications