கள்ளக்காதலுக்காக என்னை ஒதுக்குகிறார்... சென்னையில் கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா!
சென்னை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் சென்னை பெரம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர், பன்னீர்செல்வம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (28). இவருடைய மனைவி சுகன்யா (22). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணமானவுடன் சுகன்யா கர்ப்பம் தரித்தார்.
தகராறு
ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த மாதம் சுகன்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. குழந்தை இறந்த துக்கத்தினாலும், குழந்தையை சரிவர பேணவில்லை என்ற கோபத்தாலும், சுகன்யா மீது கங்காதரனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு விரட்டினார்
சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு முற்றி பெரும் வாக்குவாதமாக வெடித்தது. இதையடுத்து இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என்று கூறி, கங்காதரன், தனது மனைவி சுகன்யாவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார்.
போலீசில் புகார்
இதனால் கோபமடைந்த சுகன்யா, பெரம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தலையிட்டு கணவன், மனைவி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்து அனுப்பினர். அதன்பிறகு இருவரும் சிறிது நாட்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
வீட்டுக்கு எதிரே தர்ணா
இந்நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கங்காதரன், சுகன்யாவை வீட்டில் இருந்து மீண்டும் வெளியே அனுப்பிவிட்டார். மனமுடைந்த சுகன்யா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தனது உறவினர்கள் 2 பேருடன் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்தார்.
கள்ளத்தொடர்பா?
தகவல் அறிந்ததும் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுகன்யாவை சமாதானம் செய்தனர். எனது கணவருக்கும், அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு உள்ளது. அவளுடன் சேர்ந்து வாழவே என்னை புறக்கணிக்கிறார். எப்படியாவது என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று போலீசாரிடம் சுகன்யா தெரிவித்தார்.
போலீசார் தலையீட்டால் தர்ணாவை கைவிட்டார் சுகன்யா. இது தொடர்பாக கங்காதரனிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications