"அம்மா"வுக்கு கஷ்டம் வராமல் இருக்க அதிமுகவினர் "கப்சிப்"பாக இருக்க வேண்டியது அவசியம்!
சென்னை: கடந்த முறை ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, உங்களது கட்சிக்காரரிடம் (ஜெயலலிதா) சொல்லி அவரது கட்சிக்காரர்களை (அதிமுகவினர்) அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று ஜெயலலிதாவின் வக்கீலான பாலி நாரிமனிடம் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. எனவே நாளைய தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுகவினர் வன்முறையிலோ, வேறு தகாத செயலிலோ ஈடுபட்டாலோ அது ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஜாமீன் தருவதற்குப் பாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது சுப்பிரமணியசாமி தரப்பில், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு மக்களின் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.

இதைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமனிடம், தனது கட்சிக்காரர்களை ஜெயலலிதா அறிவுறுத்தி அமைதியாக இருக்கச் சொல்வார் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தது.
பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை விமர்சித்து தமிழகத்தில் பல இடங்களில் அவருக்கு எதிரான போராட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர். மேலும் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. அவரை கண்டித்து வேலூர் மாநகராட்சியில் தீர்மானமும் போட்டு பரபரப்பைக் கூட்டினர்கள். மேலும் தமிழகம் முழுவதும் நடந்த அதிமுகவினர் போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரவுள்ளது. மேலும் நாளை மறு நாள் ஜெயலலிதாவின் ஜாமீனை நீட்டிப்பது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.
எனவே நாளைய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு பாதமாக ஏதாவது வந்தால், அதிமுகவினர் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு கடந்த முறை போல ஏடாகூடமாக நடந்தால் அது உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications