கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பாரா?

Subscribe to Oneindia Tamil

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: 'கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பாரா?'

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பாரா?
Getty Images
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பாரா?

"எல்லா நிகழ்வையும் கூட்டணியோடு பொருத்தி பார்ப்பது நல்லது அல்ல. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய தலைவர் அமித்ஷா வருவார் என்றால் அதிகாரபூர்வ தகவல் மத்தியில் இருந்து மாநில தலைமைக்கு சொல்வார்கள். அவரது பயண திட்டம் எதுவும் எங்களுக்கு தற்போது வரை வரவில்லை" என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருவண்ணாமலையில் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.?

ட்விட்டர் பதிவு முழுவதுமாக அதிகாரபூர்வ கருத்து என்று என்னால் சொல்ல முடியாது. இப்போது வரை உலா வரும் அத்தனை கருத்துகளும் அதிகாரபூர்வமற்ற தகவல் ஆகும் என்றும் அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


கோவை தலைமை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்கிறது தினத்தந்தி நாளிதழின் மற்றொரு செய்தி.

"ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி: "கர்நாடக அமைச்சர் நடந்துகொண்ட விதம் துரதிருஷ்டவசமானது"

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடக அமைச்சர் சா.ரா. மகேஷ் நடந்துகொண்ட விதம் துரதிருஷ்டவசமானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தினமணி:
Getty Images
தினமணி:

"கர்நாடக அமைச்சர் மகேஷை கடிந்துகொண்ட விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் விமர்சித்த நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளையும், பாதுகாப்புப் படையினரின் மீட்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அங்கு சென்றிருந்தார்.

ஆய்வுக்குப் பிறகு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடல், செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

அப்போது, அவர் கலந்துகொள்ளும் கூட்டத்துக்காக அரசு அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடலை முடித்துக் கொள்ளுமாறும் நிர்மலா சீதாராமனிடம், கர்நாடக அமைச்சர் மகேஷ் கூறினார்.

அதற்காக அவரை கடிந்துகொண்ட நிர்மலா சீதாராமன், "எனக்கென திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலை ஒவ்வொரு நிமிடத்துக்கும் பின்பற்றுகிறேன். அதை நான் மீற இயலாது. உங்களுக்கு அதிகாரிகள் எவ்வாறு முக்கியமோ, எனக்கு முன்னாள் ராணுவத்தினர் அந்தளவு முக்கியம்.

நான் இங்கு பொறுப்பில் இருக்கும் அமைச்சரின் (மகேஷ்) சொல்படி நடக்க வேண்டியுள்ளது. மத்திய அமைச்சர், மாநில அமைச்சரின் வார்த்தைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. இதை நம்பமுடியவில்லை. எனது நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதை முன்னதாகவே செய்திருக்க வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வு அங்கிருந்த செய்தியாளர்களால் வீ டியோ பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த நிகழ்வுக்காக நிர்மலா சீதாராமனை விமர்சித்த கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா சனிக்கிழமை வெளியிட்ட தனது சுட்டுரைப் பதிவில், "அமைச்சர் நிர்மலா சீதாராமன், எங்கள் அமைச்சர் மீது ஆதிக்கம் செலுத்த ஆர்வமாக இருக்கிறார். இது, கர்நாடக மாநிலத்தின் மீதான பாஜகவின் அக்கறையற்ற தன்மையை பிரதிபலிக்கிறது' என்று கூறியுள்ளார்.

அமைச்சகம் விளக்கம்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கர்நாடக அமைச்சர் மகேஷ் நடந்துகொண்டவிதம் துரதிருஷ்டவசமானது. அவர் தனிப்பட்ட முறையில் தகாத வகையில் பேசியுள்ளார். அவர் கூறியதன் பேரில், அமைச்சர் நிர்மலா சீதாராமனும் முன்னாள் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலை நிறுத்திவிட்டு, அரசு அதிகாரிகளுடனான சந்திப்புக்காக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றார்.

ஆனால், அங்கு செய்தியாளர்கள் சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், அவசரகதியில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் செய்தியாளர்களிடையே அமரவைக்கப்பட்டனர். மத்திய அமைச்சரின் நிகழ்ச்சி நிரலை மாவட்ட நிர்வாகம் தயார் செய்யும்போது, மாநில அமைச்சரும் அதை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.



இந்து தமிழ்: 'மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிறது காங்கிரஸ் - 3 முக்கிய குழுக்கள் அமைப்பு'

மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிறது காங்கிரஸ் - 3 முக்கிய குழுக்கள் அமைப்பு
Getty Images
மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிறது காங்கிரஸ் - 3 முக்கிய குழுக்கள் அமைப்பு

வரும் 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகிறது. தேர்தலையொட்டி கட்சி ஒருங்கிணைப்பு, தேர்தல் அறிக்கை, விளம்பரத்தை கவனிக்க என 3 முக்கிய குழுக்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார். இந்த குழுக்களில் மூத்த தலைவர்களுடன் இளம் தலைவர்களும் இணைந்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"முதன்மை குழுவில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப. சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ் ரந்தீப் சுர்ஜிவாலா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முதன்மை குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் 9 மூத்த தலைவர்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் தலைவர் சோனியா காந்தியின் கீழ் செயல்பட்டவர்கள்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்'

ஜகார்ட்டாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஏழாவது நாளான நேற்றைய தினத்தில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் மூன்று வெண்கலம் வென்றுள்ளது.

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 23 வயது இந்திய வீரர் தஜீந்தர் பால்சிங் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். தடகளத்தில் இத்தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது. மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018-ல் இந்தியாவின் 7 வது தங்கபதக்கமாகவும் அமைந்தது.

ஸ்குவாஷ் பிரிவில் மூன்று வெண்கலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் மலேஷிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டிடம் அரையிறுதியில் தோற்றார். இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா மலேஷிய வீராங்கனை சிவசங்கரி சுப்ரமணியத்திடம் தோல்வியடைந்தார்.

ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், அரை இறுதியில் ஹாங்காங் வீரரிடம் தோற்றார். கடந்த 2014 ஆசிய விளையாட்டில் சவுரவ் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். இம்முறை தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் மூவரும் வெண்கலத்தோடு இந்தியா திரும்புகின்றனர்.

பிற செய்திகள்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+