ஏற்காடு தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேலிடத்தில் கேட்டு சொல்றோம்.. ஞானதேசிகன்

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து எங்கள் கருத்துக்களை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம். மேலிடம் உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும் என்றார் அவர்.
சல்மான் இலங்கை போகிறார்
மேலும் அவர் பேசுகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை முதல் 2 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு தமிழர்கள் பகுதியில் இந்தியா சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை நேரடியாக பார்வையிடுகிறார். பின்னர் சுற்றுப்பயணத்தின்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது மற்றும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக பேசுகிறார்.
காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் நாட்கள் அதிகமாக உள்ளது. தற்போது இலங்கையில் மாறுபட்ட சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இந்த தேர்தல் கூட இந்தியாவின் அழுத்தத்தினால்தான் நடைபெற்றதாக முதல்வர் பொறுப்பேற்க இருக்கும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
தற்போதைய சூழ்நிலை மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு காமன்வெல்த் மாநாடு தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார் ஞானதேசிகன்.
Yercaud Tourism - A Less Explored Hill Station
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications