For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலதெய்வ கோவில் சபதம்...ஆட்சியை கவிழ்க்க தனி ஒருவனாக களமிறங்கும் தினகரன்

குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்து விட்டு சட்டசபையில் அடிஎடுத்து வைத்துள்ள தினகரன், இனி தனி ஒருவனாக தனது ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன் இருக்கை...ஸ்டாலின் வெளிநடப்பு...பரபரப்புடன் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடர்- வீடியோ

    சென்னை: சட்டசபைக்குள் அடியெடுத்து வைக்கும் முன்பாக குல தெய்வ கோவிலில் ஆட்சி கவிழ்ப்புக்கான அச்சாரத்தை போட்டுள்ளார் டிடிவி தினகரன். தனி ஒருவனாக அதற்காக காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டியும், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டியும் மன்னார்குடி-கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள தனது குல தெய்வமான வீரமணவாளன் கோவிலில் டிடிவி தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரினி சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள், எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது என கூறினார்.

    சட்டசபையில் சிங்கிள்

    சட்டசபையில் சிங்கிள்

    டிடிவி தினகரன் அணியில் ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். தினகரனுடன் மொத்தம் 19 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக உள்ளனர். 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த இடங்கள் இப்போது சட்டசபையில் காலியாக உள்ளன. மேலும் 4 பேரை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் பேசி வருகிறார். இதனை அறிந்தே அவர்களை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

    எம்எல்ஏக்களை இழுக்க திட்டம்

    எம்எல்ஏக்களை இழுக்க திட்டம்

    டிடிவி தினகரன் அணியில் ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். தினகரனுடன் மொத்தம் 19 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக உள்ளனர். 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த இடங்கள் இப்போது சட்டசபையில் காலியாக உள்ளன. மேலும் 4 பேரை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் பேசி வருகிறார். இதனை அறிந்தே அவர்களை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

    பெரும்பான்மைக்கு தேவை

    பெரும்பான்மைக்கு தேவை

    ஆட்சியை நடந்த 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்கிற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனில் தினகரனுக்கு 24 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும்.

    ஸ்டாலின் நிலைப்பாடு

    ஸ்டாலின் நிலைப்பாடு

    அதேபோல், நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவரவேண்டுமென்றால், தினகரனின் ஆதரவும் தேவைப்படும். எனவே அரசை கலைக்க தினகரனின் ஆதரவை நாடுவாரா ஸ்டாலின் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் தினகரனுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறியுள்ளார் ஸ்டாலின்.

    குலதெய்வ கோவில் சபதம்

    குலதெய்வ கோவில் சபதம்

    இடைத்தேர்தலுக்கு முன்பாக கோவில் கோவிலாக சென்று யாகங்கள், பரிகாரங்கள் செய்த தினகரன், வெற்றிக்கு பின்னர் குல தெய்வ கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அப்போது ஜெயலலிதா ஆட்சியை விரைவில் அமைப்போம் என்று கூறியுள்ளார். குல தெய்வ கோவிலில் சபதம் செய்து விட்டு ஆட்சி கவிழ்ப்புக்காக அடுத்த கட்ட காய் நகர்த்தல்களை ஆரம்பித்து விட்டார் தினகரன் என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

    English summary
    TTV Dinakaran has entered into the Assembly and determined to disturb the ADMK govt led by CM Edappadi Palansamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X