ஏற்காடு இடைத் தேர்தல்.. ஏன் அமைதி காக்கிறார் விஜயகாந்த்?

வழக்கமாக இடைத் தேர்தல் வந்தால் தேமுதிக தனது வேலைகளை ஆரம்பித்து வேட்பாளரையும் இறுதி செய்து அறிவித்து விடும். ஆனால் இந்த முறை இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் பெருத்த அமைதி காத்து வருகிறார் விஜயகாந்த்.
அதேசமயம், சேலம் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். போட்டியிடலாமா அல்லது ஒதுங்கியிருக்கலாமா என்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் தேமுதிகவுக்கு 12,000 ஓட்டுக்கள் வரை கிடைத்தது. எனவே இந்த முறை போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர். வேட்பாளரை அறிவித்தவுடன் பிரசாரத்தைத் தொடங்கவும் அவர்கள் தயார்தான். ஆனால் தலைவர் எதுவும் பேசாமல் இருப்பது அவர்களை சோர்வடைய வைத்துள்ளதாம்.
16ம் தேதிதான் மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். நாளை அரசு விடுமுறை மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே இன்றும், 16ம் தேதியும் மட்டுமே அவகாசம் உள்ளது.
இருப்பினும் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்தால் ஆளுங்கட்சியினர் ஏதாவது குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதால் கடைசி நேரத்தில் கூட விஜயகாந்த் வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவரது கட்சியினர் உள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications