காங்-தே.மு.தி.க. கூட்டணியா?: திமுகவுடன் கூட்டணியா?- ஞானதேசிகன்
சென்னை: திமுகவுடன் கூட்டணி குறித்த யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து காங்கிரஸ் விருப்ப மனு பெறப்படுகிறது. இன்று மாலையுடன் இது முடிவடைகிறது. மனுக்கள் அனைத்தும் நாளை மாநில தேர்தல் குழு ஆய்வு செய்து நாளை மறுநாள் டெல்லி தலைமை தேர்தல் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

நாங்கள் இப்போது கூட்டணி பற்றி யோசிக்கவில்லை. 39 தொகுதிகளுக்கும் மனு வாங்குகிறோம். தே.மு.தி.க. காங்கிரசுடன் கூட்டணி சேருமா? என கேட்கிறார்கள். பல கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. பொதுவாக கூட்டணி பேச்சு விஷயங்களை அறைக்குள்தான் பேச முடியும். அம்பலத்தில் சொல்ல முடியாது.
எந்தெந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று எல்லா கட்சிகளுமே காய்களை நகர்த்தி வருகிறது.
விஜயகாந்தையும் தேமுதிக எம்எல்ஏக்களையும் சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும். ஆனால், பிரதமருடன் விஜயகாந்த் என்ன பேசுவார் என எனக்கு தெரியாது.
தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுலை அழைத்துள்ளோம். மார்ச் மாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நரேந்திர மோடி கூட்டத்தில் பல கட்சி தலைவர்கள் வரப் போகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை. மோடி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மறு எண்ணிக்கை அமைச்சர் என்று பேசியது மிகவும் அநாகரிகமானது.
திமுகவுடன் கூட்டணி குறித்த யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார் ஞானதேசிகன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications