மைல் கற்களில் இந்தியில் எழுத உத்தரவிட்டதே திமுகதான்... பொன்னார் 'பொளேர்'
நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி எழுதப்பட்டிருப்பதற்கு திமுகதான் காரணம். 2006ல் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர் பாலுதான் அதற்கான உத்தரவை பிறப்பித்தார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்து
கன்னியாகுமாரி: நெடுஞ்சாலைகளில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சாடியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுதான் மைல் கற்களில் இந்தி எழுத உத்தரவு போட்டார் எனவும் 'பகீர்' கிளப்பியிருக்கிறார் பொன்னார்.
தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் முதலில் இந்தி மொழியில் தான் ஊர்ப்பெயர் எழுதப்பட்டிருக்கும். அடுத்து ஆங்கிலம், அதனையடுத்தே தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு தான் இவ்வாறு எழுதப்படுகிறது என்று திமுக குற்றம்சாட்டியது.

இதுகுறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ''மைல்கற்களில் இந்தி எழுதப்பட்டிருப்பதில் இரட்டை வேடம் போடுகிறது திமுக. காரணம், 2006ஆம் ஆண்டு, திமுக மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் டி.ஆர் பாலு. அவர்தான் இந்தியில் எழுத உத்தரவு போட்டார். ஆனால், இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது.
இந்தியில் எழுத உத்தரவு போட்ட டி.ஆர் பாலுவை கட்சியை விட்டு நீக்குவார்களா? என கேள்வி எழுப்பினார். பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ள இந்தக் கருத்துக்கு இதுவரை திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அதேவேளையில் ஹைட்ரோ கார்பன், கச்சத்தீவு உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்சனைக்கும், பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுக மீது சமீபகாலமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications