தேவைக்கேற்ப தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: தேவைக்கேற்ப தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விஜயகாந்துடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி கெஞ்சி, தாங்கியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் தனியாக போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார் விஜயகாந்த். இருப்பினும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என அவரின் மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், தேவைக்கேற்ப பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.
சட்டசபை தேர்தலை பாஜக தனியாக சந்திக்க தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 2014ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கும் அளவுக்கு பாஜக பலம் வாய்ந்ததாக இருந்தது. தற்போதும் பலமான கட்சியாகவே உள்ளது. சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எங்கள் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் கூட எங்கள் பணி அவர்கள் வெற்றி பெற உதவும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் சிதைந்துவிட்டன. அவற்றை எப்படி ஒன்று சேர்ப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லாம் சேர்ப்போம் என்றார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications