கொமுகவின் அறிவிப்பால் அதிமுகவுக்குப் பாதிப்பு வருமா...?

காரணம், கொங்குப் பகுதியில்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றது, சீட்டுகளையும் வென்றது. எனவே அப்பகுதியில் சற்றே பலமாக உள்ள கொமுக 22 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் அதிமுகவுக்கு பாதிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை நிறுவனர் கோவை செழியன் 83 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் தேசிய சமுதாய கூட்டமைப்பு மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் கோவை ராமநாதபுரம் - எஸ்.என் அரங்கத்தில் விழா நடைபெற்றது. அப்போது, கோவை செழியனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய சமுதாயக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தேசியத் தலைவரும், கொங்கு நாடு முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவருமான பெஸ்ட்ராமசாமி 2014 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கொங்குநாடு முன்னேற்றக் கழக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
முதல் கட்டமாக திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் பெஸ்ட் ராமசாமி. இந்தக் கூட்டணியில், அறிவிக்கபட்ட 22 தொகுதிகளில் மீதமுள்ள 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நான்கு கட்டங்களாக வெளியிடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளி்லும் வெற்றியை பெற வேண்டும் என திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் முயன்று வரும் வேளையில், கொங்கு மண்டலத்தில் இக் கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் அறிவிப்பாலும், அதன் புதிய கூட்டணியாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு பாதிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications