மணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா?
சென்னை: நரேந்திர மோடியை டீ விற்பவர் என்று முதன்முதலாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தன. அப்போது காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் மோடி டீ விற்றது பற்றி விமர்சனம் செய்தார்.
அதன் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அய்யர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

மோடி
நான் சிறுவயதில் வறுமையில் வாடினேன். ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்றேன் என்று பிரச்சார கூட்டத்தில் மோடி கூறினார். அப்போது அவர் டீ விற்றதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அய்யர்
மணி சங்கர் அய்யரோ மோடியால் பிரதமராக முடியாது. வேண்டும் என்றால் அவருக்கு கடை வைத்துக் கொடுக்கிறோம் காங்கிரஸாருக்கு டீ விற்கட்டும் என்றார்.

பாஜக
அய்யர் எந்நேரம் பார்த்து மோடியை சாய்வாலா என்றோரோ அதை பாஜக கெட்டியாக பிடித்துக் கொண்டது. பிரச்சார மேடைதோறும் சாய்வாலா சாய்வாலா என்று கூறியே வாக்குகள் கேட்டது.

சாய்வாலா
மோடியும் செல்லும் இடமெல்லாம் நான் டீ விற்றவன் என்று பெருமையாகக் கூறியதுடன் டீக்கடைக்காரர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

வதோதரா
மோடி தான் போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரர் ஒருவரை அழைத்துச் சென்றார். அந்த டீக்கடைக்காரர் மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்தார்.

நமோ டீ
மோடியின் பெயரில் நமோ டீ என்று விற்றனர். அது பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. அய்யர் கூறிய சாய்வாலாவை வைத்தே பாஜக பாமர மக்களின் ஆதரவை பெற்றது.

வெற்றி
மோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர்
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து மோடி பிரதமர் ஆவது உறுதியாகிவிட்டது.

டீ
எந்த மோடியால் பிரதமர் ஆக முடியாது டீ தான் விற்கப் போகிறார் என்று அய்யர் கூறினாரா தற்போது அதே மோடி தான் பிரதமர் ஆகப் போகிறார். அப்படி என்றால் அய்யர் இனி டீ குடிப்பதை நிறுத்துவாரா?
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications