வாடிவாசல் திறக்காதவரை வீட்டு வாசலை திறக்கமாட்டோம்- அலங்காநல்லூர் பெண்கள் ஆவேசம்
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் இன்று 4வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரி வாடி வாசலை திறக்கும் வரை இடத்தை விட்டு நகரப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு
மதுரை: ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. வாடிவாசலை திறக்கும் வரை வீட்டு வாசலை திறக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகளை காண தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் அலங்காநல்லூர் வாடிவாசல் மூடப்பட்டுள்ளது.
வாடிவாசலை திறக்கக்கோரியும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் கடந்த திங்கட் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலை திறக்கும் வரை வீட்டு வாசலை திறக்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications