நத்தம் அல்லது திண்டுக்கலில் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு திடீர் திட்டம்?
அலங்காநல்லுருக்குப் பதில் நத்தம் அல்லது திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அருகில் வேறு ஏதாவது ஊரில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டு கணக்கு காட்ட தமிழக அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்ததாக பதிவாக வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதைச் செய்து விட்டு நாளை கூடும் சட்டசபைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அனேகமாக மதுரைக்கு அருகே நத்தம் அல்லது திண்டுக்கல்லில் முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடைபெறலாம் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன. மேலும் முரட்டுக்காளைகள் கிடைக்காமல் போனால் வாடிவாசல் வழியாக சாதாரண காளைகளை அவிழ்த்து விடலாமா என்றும் ஆலோசனை நடக்கிறதாம்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது மதுரை பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு வைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications