ஜெ.வுக்கு பரப்பன அக்ரஹாரா.. கருணாநிதி, ஸ்டாலினுக்கு விரைவில் புழல்?.. கைது வதந்தியால் பரபரப்பு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய தமிழக தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவர் மீதும் கொலை மிரட்டல், தாக்குதல் நடத்தத் தூண்டியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னை ராயப்பேட்டை போலீஸார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா ஜாமீனில் வெளியானதும் இவர்கள் இருவரையும் கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் திமுக தரப்பில் இதை முறியடிக்கத் தேவையான சட்டப்பூர்வமான ஏற்பாடுகளைத் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் வன்முறை
ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. கடையடைப்பு, பஸ்கள் எரிப்பு, சாலை மறியல் என அதிமுகவினர் இறங்கினர். சென்னையிலும் வன்முறை தலைவிரித்தாடியது.

கோபாலபுரத்திற்கு விரைந்த அதிமுகவினர்
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை நோக்கி அதிமுகவினர் படையெடுத்து வந்தனர். இதை எதிர்பார்த்து திமுகவினரும் திரண்டிருந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் இரு தரப்பிலும் பலர்காயமடைந்தனர்.

அதிமுகவினர் புகார்.. போலீஸ் வழக்கு
இந்த தாக்குதல் தொடர்பாக காயமடைந்ததாக கூறப்பட்ட அதிமுகவினர் சிலர் ராயப்பேட்டை காவல் நிலயைத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலவரத்தைத் தூண்டியது. பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட புகார்களை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் 500 திமுகவினர் மீது போலீஸார் பதிவு செய்தனர்.

கைது நடவடிக்கை வருமா
இந்த வழக்கில் கருணாநிதி,ஸ்டாலின் கைது செய்யப்படுவார்களா என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் விசாரித்தபோது அப்படியெல்லாம் இருக்காது என்றுதான் முதலில் பதில் வந்தது. ஆனால் தற்போது கைதுக்கான நடவடிக்கைகள் ரகசியமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதா வெளியே வந்ததும்
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் கருணாநிதி, ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் சட்டப்பூர்வமான ஆலோசனைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications