நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மும்பை வந்தார் ரஜினி
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டார்.
Recommended Video

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னையிலிருந்து மும்பைக்கு வந்துள்ளார்.
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அங்கு அவரது உயிர் பிரிந்தது.

ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் இறப்பு ஈடு செய்ய முடியாதது என்று ரஜினியும், கமலும் தனித்தனியே இரங்கல் செய்தி வெளியிட்டும், பேட்டியையும் கொடுத்தனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக மும்பைக்கு இன்று இரவு விமானம் மூலம் துபாயிலிருந்து கொண்டு வரப்படுகிறது. அவரது உடல் கெட்டு விடாமல் இருப்பதற்காக எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு மும்பை புறப்பட்டு சென்றார். நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரஜினி, கமல் ஆகியோர் மும்பை வந்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு நாளை இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. மும்பையில் உள்ள இல்லத்தில் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications