லதா ரஜினியின் சொத்து ஆவணங்களை வங்கியிடமிருந்து மீட்போம்: மீடியா ஒன் உறுதி
சென்னை: எக்ஸிம் வங்கி கையகப் படுத்தியுள்ள லதா ரஜினிகாந்தின் சொத்து ஆவணங்களை மீட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைப்போம் என மீடியா ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர் என்ற தொழில் நுட்பத்தில் உருவான அனிமேஷன் திரைப்படம் ‘கோச்சடையான்'. ரஜினியின் இளைய மகள் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் செலவுகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எக்ஸிம் வங்கியிடம் ரூ.20 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனது சொத்து ஆவணங்களை ரஜினியின் மனைவி லதா உத்தரவாதமாக கொடுத்திருந்தார்.
இந்நிலையில், உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் கடந்த வாரம் லதா ரஜினியின் சொத்துக்களைக் கையகப் படுத்தியது வங்கி. இதையடுத்து மீடியா ஒன் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில், இன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மீடியா ஒன் நிறுவனத்தின் தலைவரான முரளி மனோகர். அப்போது அவர் பேசியதாவது:-
10 ஆண்டுகால பயணம்...
மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நாங்கள் 10 ஆண்டு காலமாக நடத்தி வருகிறோம். இந்நிறுவனம் சார்பாக சில படங்களை தயாரித்தும், சில படங்களை விநியோகித்தும் வருகிறோம்.
கோச்சடையான்...
எங்களுக்கு இந்திய கலாச்சார படங்களை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாக இருந்து வந்தது. அந்த நிலையில்தான் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த கோச்சடையான் படத்தை தயாரிக்க முன்வந்தோம்.
காலதாமதத்திற்கான காரணம்...
மற்ற தமிழ்ப்படங்களைப் போல் அல்லாமல், இப்படம் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் உதவியாலேயே நடந்ததால, இப்படம் வெளிவருவதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டது. அந்த நிலையில் எங்களுக்கு பண நெருக்கடியும் உருவானது.
லதா ரஜினியின் உதவி...
அப்போது எங்களுக்கு லதா ரஜினிகாந்த் அவர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்கள் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை வங்கியில் வைத்து, கடன் வாங்கி இந்த படத்தை எடுத்தோம்.
முயற்சி...
ஆனால், குறிப்பிட்ட தேதியில் அந்த கடனை வங்கியில் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வங்கி நிர்வாகம் சொத்தை கைப்பற்றப் போவதாக அறிவித்தது. எனினும், அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
பேச்சுவார்த்தை...
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முழுமையாக கடனை செலுத்தி எங்களுக்கு உதவிய லதா ரஜினிகாந்த் அவர்களின் சொத்து ஆவணங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications