அதிமுக இணைப்பு விவகாரம்.. எஸ்.எம்.எஸ். வந்தது.. விரைவில் நல்ல முடிவை சொல்லுவோம் - ஓ.பி.எஸ்
சென்னை: இரு அணிகள் பேச்சுவார்த்தை குறித்து அதிமுக அம்மா அணியிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதுகுறித்து விரைவில் நல்ல முடிவை சொல்லுவோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் தனித்தனியாக இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று இரு அணிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் உருவாகியுள்ளது.
இதனிடையே நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என்றும் பேச்சு வார்த்தை தொடர்பாக எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் மதுசூதனன் இல்லத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேச்சுவார்த்தை குறித்து அதிமுக அம்மா அணியிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்.க்கு நல்ல முடிவை விரைவில் சொல்லுவோம் எனக் கூறினார். இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னம் வழக்கில் உள்ளதால் அதைப் பற்றி பேச முடியாது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications