தஞ்சை, அரவக்குறிச்சி போல ஆர்.கே.நகரிலும் தேர்தல் ரத்து? டிடிவி தினகரன் தரப்பில் பதற்றம்
சென்னை: பணப்பட்டுவாடா புகார்களால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற பரபரப்பு அரசியல் கட்சிகள் இடையே எழுந்துள்ளது.
மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்குவது அதிகம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க வந்துவிட்டது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலிலும் இதே நிலைதான் நீடிக்கும் என்ற கருத்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கே இருப்பதாக கூறப்படுகிறது.

புகார்கள்
அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆளும் கட்சி பணப்பட்டுவாடா செய்வதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார்களை அளித்து வருகிறார்கள். இதனால் ஆளும் தரப்பு மீது கடும் நெருக்கடிகளை காட்டி வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஒத்திவைப்பு
குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே இருந்தால், ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்தி வைத்துவிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை டிடிவி தினகரன் தரப்பு விரும்பவில்லை.

முதல்வராக திட்டம்
டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணை வேகம் பெற்றுநாள்தோறும் விசாரணை என்ற அளவுக்கு சென்றுள்ளதால், தீர்ப்பும், விரைவில் வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தீர்ப்புக்கு முன், எப்படியாவது தான் எம்.எல்.ஏவாகி, முதல்வராகிவிட வேண்டும் என்று தினகரன் கருதுவதாக கூறப்படுகிறது.

கடும் நடவடிக்கை
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம், சில உயர் அதிகாரிகளை காத்திருப்பில் வைத்தது, தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் என அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏற்கனவே வரலாறு
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகலாம் என்ற யூகங்கள் கிளம்பின. கடந்த சட்டசபை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில், பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றது.

தம்பிதுரை கெஞ்சல்
இந்நிலையில், நேற்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனுக்கு சென்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வரும் புகார்கள் ஆதாரமற்றவை. இதை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications