காங்கிரஸிலிருந்து விலகுகிறாரா திருநாவுக்சரசர்?
புதுக்கோட்டை: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.திருநாவுக்கரசர் கட்சியை விட்டு விலகப் போவதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் தான் கட்சி தலைமையின் மூலம் அறிவிக்கப்படும்.
மற்ற கட்சிகளைப்போல தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி காங்கிரஸ் இல்லை. என்றும் மக்களோடு மக்களாகவே காங்கிரஸ் கட்சி இருக்கும்.
நான் காங்கிரஸை விட்டு விலகும் எண்ணமோ, அதிமுகவில் மீண்டும் இணையும் எண்ணமோ இல்லை. எப்போதும் நான் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன்' என்றார் அவர்.
திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக பல வருடம் நீடித்தவர். அவரது மறைவுக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு மீண்டும் வந்தார். பிறகு மீண்டும் பிரிந்தார். அதன் பின்னர் காங்கிரஸில் அவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications