தமிழக சட்டசபையில் இன்று என்ன 'சம்பவம்' செய்வாரோ? திமுக கூட்டணியில் நீடிப்பாரா வேல்முருகன்?
சென்னை: தமிழக சட்டசபையில் தமிழர் நலன் சார்ந்தும் தமிழர் மண் சார்ந்தும் தமது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைப்பேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வேல்முருகன் முழக்கம் எழுப்பியதால் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்திக்குள்ளானார். இந்த நிலையில் இன்றும் சட்டசபையில் வேல்முருகன் எப்படி செயல்பட போகிறார்? திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது. பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் வேல்முருகன்.

ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக தலைமை மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார் வேல்முருகன். தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் வேல்முருகன் திட்டமிட்டிருந்தார். தமிழக அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை வேல்முருகன் முன்வைத்தார்.
இதன் பின்னர் திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் வேல்முருகன். இந்த சந்திப்பின் போது தமது மனக் குமுறல்களை வேல்முருகன் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் வேல்முருகன் தலைமையிலான தவாகவில் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு முன்னணி நிர்வாகிகள் இணைந்தும் வருகின்றனர். இதனால் சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்கும் அதிகமான இடங்களைப் பெற்றுத் தர வேண்டிய நெருக்கடியிலும் தவிப்பிலும் வேல்முருகன் இருந்து வருகிறார். திமுக கூட்டணியில் வேல்முருகனுக்கு ஒரு சீட்டுக்கும் அதிகமான இடம் கிடைப்பதற்கும் வாய்ப்பு குறைவுதான்.
இந்த நிலையில் திடீரென பாமக நிர்வாகிகள், வேல்முருகனை சந்தித்தனர். இதனால் பாமகவுடன் வேல்முருகன் கை கோர்ப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்தது.
இதனிடையே தமிழக சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. சட்டசபையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாகவும் நின்று கோரிக்கைகளை எழுப்பினார் வேல்முருகன். இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரைத்தார். ஆனால் சபாநாயகரோ, வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை மட்டும் விடுத்திருந்தார்.
இதனிடையே, தமிழக சட்டசபையில் இன்றும் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை எழுப்புவேன்; அப்போது திமுக தலைமை என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கட்டும் என கூறியிருக்கிறார் வேல்முருகன். அதேநேரத்தில் இந்த நிமிடம்வரை திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறேன் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்றும் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் வேல்முருகன் நடவடிக்கைகள் இருந்தால் சபையில் இருந்து அவர் வெளியேற்றப்படக் கூடும்; இதனைத் தொடர்ந்தே திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறும் நிலைமையும் உருவாகலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications