பிப்.20ல் காஞ்சியில் மாநாடு நடத்தும் விஜய்காந்த்.. அதில் கூட கூட்டணியை அறிவிக்க மாட்டார்...
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிப்ரவரி 20ம் தேதி காஞ்சிபுரத்தில் "தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு" நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். சட்டசபை தேர்தலில் கூட்டணி யாருடன் என்று காஞ்சிபுரத்தில் விஜயகாந்த் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாநாடு குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும், அதற்கு நம்மால்முடிந்த உதவிகளைச் செய்திட வேண்டும் என்ற நோக்கில் "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" எனும் கொள்கை முழக்கத்தோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் துவக்கப்பட்டு, தமிழக மக்களின் பேராதரவோடு 11-வது ஆண்டில் மக்களின் நலனுக்காக அரும்பாடுபட்டு வருகிறது. நம் இயக்கம் பல சோதனைகளை சந்தித்தாலும், லட்சகணக்கான தொண்டர்களின் கடும் உழைப்பும், பல்வேறு தியாகங்களும் இயக்கத்தை கட்டிக்காத்து வருகிறது. சோதனைகள் பல வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றும் திறமை, நம் இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
நமது தே.மு.தி.க. பல மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. குக்கிராமம் முதல் மாநகரம் வரை தமிழகத்திலுள்ள மூலை முடுக்கெங்கும், மக்கள் நலனுக்காக பணியாற்றிக் கொண்டுள்ள தே.மு.தி.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் என நாம் அனைவரும் ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவதற்கும், ஜாதி, மதம் என்ற பேதம் பாராமல், ஏற்றத்தாழ்வை மறந்து, மாநாடாக ஒன்றுகூட வேண்டும். அதை தமிழக மக்களின் வளர்ச்சிக்கான மாநாடாக நடத்த வேண்டுமென திட்டமிட்டுள்ளேன்.
எனவே அதனடிப்படையில் வருகின்ற 20.2.2016 (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேடல் என்ற இடத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் "தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு" (துணிந்திடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்திற்கான ஆரம்பம்) நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்கிட தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு, முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். மேலும் சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர் விளம்பரங்கள் மற்றும் துண்டறிக்கைகள், போஸ்டர்கள் மூலம் விளம்பரங்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்து "தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு" மாபெரும் வெற்றிபெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுப்பணிகள் சிறப்புடன் நடைபெறுவதற்காக தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.முருகேசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் செ.தங்கபாண்டியன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.எச்.சேகர் எம்.எல்.ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட மாநாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இந்த மாநாட்டில் நிச்சயமாக கலந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் மாநாட்டின் வெற்றிக்கு அது மட்டும் போதாது. தாங்கள், தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்துவந்து மாநாட்டில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கடன் சுமை, விவசாயிகள் பிரச்சனை என அனைத்திலும் தமிழக மக்கள் சிக்கித்தவிக்கும் நிலையில், அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் மாநாடாகவும், நதிநீர் இணைப்பு, உள்கட்டமைப்பு வசதி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் மாநாடாகவும் இது அமையும். எனவே தே.மு.தி.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு பொது மக்களும் பெருந்திரளாக வருகை தந்து மாநாட்டை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் கூட்டணி பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதையும் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார் விஜயகாந்த். காஞ்சிபுரத்திலாவது யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பாரா அல்லது அவரை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நலக்கூட்டணி, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சியினரை தொங்கலில் விடுவாரா?..
பெரும்பாலும் தொங்கல் தான்!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications