ஆர்.கே. நகரில் போட்டியா? இல்லையா? தீவிர ஆலோசனையில் விஷால்!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வரும் விஷால் திங்கட்கிழமையன்று தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால் தனது நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமையன்று தனது முடிவு அவர் அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துகொண்டுள்ளன.
ஆர்.கே. நகரில் விஷால் களமிறங்கினால் 5 முனை போட்டியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் விஷால்
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகியுள்ளார். இப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் விஷால்.

விஷால் போட்டியா?
இந்த நிலையில்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷாலை களமிறக்கி நடிகர் கமல் ஆழம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலுக்கு வட சென்னையில் கிடைத்துள்ள மக்கள் ஆதரவை விஷாலை வைத்து அறிந்துகொள்ள அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.

கமலுக்கு வாய்ப்பு
விஷால் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கணிசமான வாக்குகளை பெற்றாலும், அது கமல் கட்சி துவங்கும் வேகத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

வேட்புமனு தாக்கல் இறுதிநாள்
இதனிடையே நடிகர் விஷால் தனது நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாளாகும். எனவே விஷால் தனது முடிவினை திங்கட்கிழமை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் போட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சையாக டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. விஷால் களமிறங்கினால் 5 முனை போட்டியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications