காதலித்து ஏமாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரை கைது செய்யுங்கள்: இளம் பெண் மீண்டும் புகார்
சென்னை: திருமணம் செய்வதாக கூறி காதலித்து பின்னர் ஏமாற்றிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கூறியுள்ளார்.
சென்ளை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் இளம் பெண் பிரியதர்ஷினி. கடந்த 2011-ம் ஆண்டு பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த வருண்குமார் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்பதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்றபோது வருண்குமாரைச் சந்தித்தேன். முதலில் நண்பர்களாகப் பழகிய நாங்கள், பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்கள் இருவர் வீட்டிலும் எங்கள் முடிவை ஏற்றுக் கொண்டனர்.
2010-ல் நடந்த தேர்வில் வருண்குமார் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட செலவுகளை சமாளிப்பதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து வருண்குமாருக்கு பணம் கொடுத்தேன். 2011 மே மாதம் ஐ.பி.எஸ். (பயிற்சி) அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.
நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ஏராளமாக வரதட்சிணை தர வேண்டும் என்று குடும்பத்தினர் கூறியதையடுத்து என்னைத் திருமணம் செய்துகொள்ள வருண்குமார் மறுத்து விட்டார் என்று பிரியதர்ஷினி தனது புகாரில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வருண்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, மனுதாரர் வருண்குமாருக்கு 2012ம் ஆண்டு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியதர்ஷிணி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு கடந்த பிப்ரவரி 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. பிரியதர்ஷிணி சார்பில் மூத்த வக்கீல் எம்.என்.கிருஷ்ணமணி ஆஜராகி வாதாடினார்.
காதலர் தினத்தில்
இதனையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை கடந்த 14ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.காதலர் தினத்தன்று இந்த தீர்ப்பு வந்தது மகிழ்ச்சியளிப்பதாக பிரியதர்ஷினி கூறியிருந்தார்.
அருப்புக் கோட்டைக்கு மாற்றம்
ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த வருண்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். தற்போது அவர் அருப்புக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மீண்டும் புகார்
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பிரியதர்ஷினி, மகளிர் அமைப்பினருடன் மீண்டும் வந்தார். அவருடன் ஜனநாயக மாதர் சங்க செயலாளர் வனஜா மற்றும் மகளிர் சட்ட உதவி மையத்தை சேர்ந்த மனோண்மணி ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி கூறியதாவது:
முன்ஜாமீன் ரத்து
கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகிறேன். கடந்த பிப்ரவரி 14-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. அவரது பெற்றோருக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது.
போலீசில் சரணடையவில்லை
இதன் பிறகு ஒரு வாரம் ஆகியும் அவர் போலீசில் சரண் அடையவில்லை. போலீசாரும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே நான் வேறு வழியின்றி மகளிர் அமைப்பு உதவியை நாடி இருக்கிறேன். அவரை கைது செய்யும் வரை நான் ஓயப்போவது இல்லை என்று பிரியதர்ஷினி கூறினார்.
போராட்டம் நடத்துவோம்
மகளிர் சங்க நிர்வாகி வனஜா கூறும் போது, வருண்குமாரை போன்ற போலீஸ் அதிகாரிகள் காவல் துறையில் இருந்தால் பெண்கள் பிரச்சினை எப்படி தீர்க்கப்படும்
பிரியதர்ஷினிக்கு ஆதரவாக களம் இறங்கி நிற்கும் நாங்கள் உடனடியாக வருண்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications