செல்போனில் பாட்டு கேட்பதில் தகராறு.. மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது !

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: செல்போனில் பாட்டு கேட்கும் தகராறில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை இசிஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (27). இவருக்கும் தரணி( 24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஏற்கனவே சீனிவாசனுக்கு வனிதா என்ற மனைவி இருந்தார். இவர் மூலம் இரண்டு குழந்தைகளை உள்ளனர். இந்த குழந்தைகளை தரணிதான் வளர்ந்து வந்துள்ளார். தரணிக்கும் ஏற்கனவே திருமணமானதாக தெரிகிறது.

Woman allegedly killed by husband

வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை சீனிவாசன், செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது தரணி சென்று, நானும் பாட்டு கேட்கிறேன் என்று கேட்டிருக்கிறார். இதில் கோபம் அடைந்த சீனிவாசன், இப்போதுதான் நான் பாட்டு கேட்கிறேன். அதற்குள் ஏன் அவசரம் என்று கோபத்தில் செல்போனை தூக்கி வீசியுள்ளார்.

இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மயங்கிய நிலையில் தரணி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் தரணி இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ''செல்போனில் பாட்டு கேட்பதில் எனக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. அவரை பிடித்து தள்ளியதில் சுவரில் மோதி தலையில் காயம் அடைந்தார். இதனால் தரணி இறந்துவிட்டார்' என்றார். இதன் அடிப்படையில், சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 27-year-old man in uthukottai near has been arrested for allegedly killing his wife from Uthukottai in Thiruvallur district
Please Wait while comments are loading...